எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது
நமது நிருபர்
2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய நான்கு தன்னாட்சி அமைப்புகள் இயங்கி வருகிறது. சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில் உள்ள புத்தகங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இன்று (மார்ச் 16) 24 மொழிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
யார் இந்த ச.தமிழ்ச்செல்வன்
* 1954ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம்-சரசுவதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை பயின்றார். கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
* இவர் சிறுகதைகள், கட்டுரைகள், சிறு நூல்கள், சிறார் இலக்கியம் என பல்வேறு படைப்புகளை உருவாக்கி உள்ளார்.
* எழுத்தாளர் தமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
@block_P@
விருது அறிவிக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: 2 ஆண்டுகள் உழைப்பின் காரணமாக தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் புத்தகம் உருவானது. 50க்கு அதிகமான படைப்பாளிகளின் கதைகளை வாசித்து உருவாக்கியது. எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு ச.தமிழ்ச்செல்வன் கூறினார்.block_P
பாவம் எதிர்பார்த்தபடி தகரமுத்துவுக்கு கிடைக்கவில்லை
இவர் தலைவராக இருக்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இந்து மத வெறுப்பாளர்கள். இவர்கள்தான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியவர்கள். இவருக்கு விருது??? தமிழ் நாடு பிஜேபி என்ன செய்கிறது?
வாழ்த்துக்கள் ஐயா உங்களது பணி மேலும் மேலும் சிறக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்மேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்