இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் எப்படி அனுமதித்தது? ஜெய்சங்கர் பேட்டி
புதுடில்லி:
போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் எப்படி அனுமதித்தது? என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான் அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தாக்கி வருகிறது. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு செல்லும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. அவ்வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவோம் என எச்சரித்துள்ளது.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, 'ஷிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்தன.
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் எப்படி அனுமதித்தது? குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு ஜெய்சங்கர் அளித்த பேட்டி: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை கடந்து செல்வதற்கு ஈரானுடன் இந்தியா எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
ஈரான் போரின் போது பல நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் அதே வேளையில், ஈரானுடனான இந்தியாவின் நேரடி உறவு, நமது கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக பயணிக்க உதவியுள்ளது.
இவை இன்னும் ஆரம்பம் தான். இன்னும் பல கப்பல்கள் கடப்பதற்காக காத்திருக்கின்றன. எனவே இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நான் தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். நாங்கள் சில முடிவுகளை அடைந்துள்ளோம். இந்தியாவிற்கும் ஈரானுக்கும் ஒரு உறவு உள்ளது
பிராந்திய மோதலின் போது இந்தியா பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதையும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
நீங்க கப்பல்ல தான் LPG கொண்டு வந்தீங்க.. நாங்க பலூன் மூலம் மற்றும் துபாய் குருவிகள் மூலமும் LPG கொண்டு வரும் திட்டம் வைத்து உள்ளோம். இப்படிக்கு தமிழக பஞ்சாயத்து யூனியன்.
All these smooth transportation would not have happened if the country is ruled by Congress. Hats of to Modiji and Jaishankarji.
There are plenty of talents available in our motherland. A good leader has to identify the proper person for the proper job, without fear or favour. Also, give free hand to achieve the desired goal which is good to our motherland and not otherwise
என்னையா இது. இந்த பிரச்சினையை வெச்சி பா.ஜ.க. வை திட்டி அரசியல் செய்யலாம்னு பாத்தா, இப்படி வடை போச்சே. எந்த பால் போட்டாலும் கோல் போடறாங்களே. ஹீ ஹீ ஹீ, இது என் கருத்தல்ல. எதிர்க்கட்சிகளின் மைண்ட் வாய்ஸ். அவ்வளவே.
வாழ்த்துக்கெல்
இந்தியா, ஈரான் இரு நாடுகளின் நட்பு மற்றும் நமது பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவர்களின் முயற்சியால் இது சாத்தியமடைந்து இருக்கிறது.
ஈரானின் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சவுதி அரேபியா உட்பட ஈராக், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் எண்ணெய் பேரல்கள் ஆசிய நாடுகளுக்கு வந்து கொண்டிருந்தது. அமெரிக்கா செய்த குளறுபடி மற்றும் திமிர்த்தனத்தால் ஈரான் இந்தப் பாதையை அடைத்து விட்டது. அதனால்தான் சௌதி அரேபியா எதிர்காலத்தில் ஈரானால் இப்படியெல்லாம் நடக்கும் என்று 45 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து வைத்திருந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் முழு உலகமும் பீதியடைந்த நிலையில், சவுதி அரேபியா 1,200கி.மீ நீளத்துக்கு எண்ணெய் குழாயை அமைத்து அந்தப் பாதையை தயாராக வைத்திருந்தது. இந்த எண்ணெய் குழாய் பாரசீக வளைகுடாவிலிருந்து நேராக செங்கடல் வரை ஹார்முஸ் பாதையை முழுவதுமாகக் கடந்து செல்வது போல் கட்டமைத்தது. 1981 ம் ஆண்டு இது ஆரம்பிக்கப் பட்டது. இதோ இப்போது 2026 ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வந்து விட்டது. தற்போது பாலைவனத்தின் வழியாக ஒரு நாளைக்கு குறைந்தது 7 மில்லியன் பீப்பாய்கள் வரை இந்தக் குழாய் வழியாக பாய்கின்றன. ஈரான் உலகின் எண்ணெய் வர்த்தகத்தை மூச்சுத் திணறச் செய்து கொண்டிருக்கும் போது பல தசாப்தங்களுக்கு முன்பே சௌதியின் இந்த அமைதியான திட்டம் இப்போது புத்திசாலித் தனமான புவிசார் அரசியல் நகர்வாக உலக அரங்கில் பார்க்கப் படுகிறது!
என்னமோ இவரு பேசித்தான் கப்பல்களை அனுமத்தார்களாம். மறைந்த ஈரான் அதிபர் காமெனி அவர்களை ஈவு இரக்கமின்றி கொன்றவர்களை வன்மையாக கண்டித்து எங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இங்குள்ள கூட்டணி கட்சிகள் வடித்த கண்ணீருக்கான பதில் தான் உங்கள் கப்பல்கள் அனுமதி கிடைத்ததற்கு காரணம்.
.சரிதான். எங்கள் தன்னிரகற்ற முதல்வர் வாழ்க தமிழ் வளர்க டாஸ்மாக் புகழ் வளர்க ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
முதல்வர் 50 பஸ் அனுப்பி எண்ணெய் கொண்டு வந்துட்டாரு.
ஈரான் காரங்க அப்படியே குலை நடுங்கி பொய்யுட்டாங்கமேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்