தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தேஜ கூட்டணி நாளை ஆர்ப்பாட்டம்; அண்ணாமலை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தேஜ கூட்டணி கட்சிகள் இணைந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை;
திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகரித்து விட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத திமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கவும், நாளைய தினம்(மார்ச் 17), தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை இருக்கிறது. போதைப் பொருள்கள், நமது இளைஞர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது.
இந்த நிலையை மாற்ற தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகளின் பாதுகாப்பிற்காகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாதுகாப்பான தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜ தேர்தல் நேர நாடகங்களை எல்லாம் மக்கள் டெல்லி கெஜ்ரிவால் தேர்தலிலே பார்த்து விட்டனர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.மேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்