எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
புதுடில்லி: லோக்சபா எம்பிக்கள் 8 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடிவு, சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே இண்டி கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீதும் வீசினர்.
அதைத் தொடர்ந்து எம்பிக்களான மாணிக்கம், தாகூர், வெங்கடேசன், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படேல் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டி கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவதுஅமர்வு நடந்து வருகிறது. இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அவையை சமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் 8 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறுவது என முடிவுசெய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் நாளை மார்ச் 17 ம் தேதி நண்பகல் 12 மணிக்கு லோக்சபாவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. மேலும் அவையின் கண்ணியம் கருதி பதாகைகள் மற்றும் ஏஐ உதவியுடன் தயார் செய்யப்பட்ட புகைப்படங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் எம்பிக்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை
இனி சபா நாயருக்கு எந்த அச்சுறுத்தலும் வந்தால் அந்த எம்.பி.யின் பதவிவை முழுதுமாக பறித்துவிட வேண்டும் இது சந்தை கடையா அல்லது புண்ணியமான மக்கள் சபையா என்பதை அந்த உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுத்து தீர்மானம் செய்து அங்கே அமர வேண்டும் ஒரு குறிப்பிட்ட அறிவுரையின்படி அங்கே பேச தாராளமாக அனுமதி அளிக்கப்படும் அவைகண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் சம்பந்தமே இல்லாதவற்றை பேசி காலத்தை வீணடிக்கூடாது சபா நாயக்கரின் கருத்துக்கு
உட்பட்டு எதுவும் பேச வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கும் உட்பட்டால் மட்டுமே சபைக்குள் அனுமதிக்க வேண்டும்
Lets see whether they follow the rules in letter and spirit without claiming any birthright previlegesமேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்