எல்பிஜி உடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் வந்தது இந்திய கப்பல் ஷிவாலிக்

8


ஆமதாபாத் : ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி டாங்கர் கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அந்த வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.


இதனையடுத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஷி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நான்குமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியிருந்தது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர், இயற்கை எரிவாயு உடன் கப்பல் ஒன்று இந்தியா வந்தடைந்தது.


இந்நிலையில், இந்தியாவின் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற எல்பிஜி டேங்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.


அவற்றில் ஷிவாலிக் எல்பிஜி டேங்கர், குஜராத்தின் முந்தரா துறைமுகத்திற்கு இன்று மார்ச் 16 வந்தது. நந்தா தேவி என்ற டேங்கர் கப்பல் நாளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement