உள்ளூர் வாகனங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

குன்னுார்: குன்னுாரில் தேர்தல் ப ணிக்கு உள்ளூர் வாகனங்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி, கண்டன போராட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக வாடகை வாகனங்கள் பயன்படுத்த, டெண்டர் விடப்பட்டு மாவட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் ஊட்டியில் இருந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில், குன்னுார் பகுதிகளில் உள்ளூர் வாடகை வாகனங்களை இயக்க அனுமதிக்குமாறு, குன்னுார் ஆர்.டி.ஓ.,அலுவலகத்திற்கு டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சென்று தங்களது வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினர். நடவடிக்கை இல்லாததால், தங்களின் வாகனஙகளை நேற்று இயக்காமல் நிறுத்தி வைத்து, கண்டன போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் கூறுகையில், 'இப்பணிக்காக ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு முன்னதாக இதற்கான பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த பிரச்னை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்,' என்றனர்.

Advertisement