சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது; அச்சம் தேவையில்லை: இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி
புதுடில்லி: காஸ் சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது. அச்சம் தேவையில்லை. தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுங்கள் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோகம் பாதுகாப்பாகவும் தடையின்றியும் தொடர்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு
எல்பிஜி காஸ் சிலிண்டர்கள் சீராகக் கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது.
சில வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட முன்னதாகவே முன்பதிவு செய்ய முடியும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், முன்கூட்டிய முன்பதிவுகள் தற்காலிகமாகத் தேவையை அதிகரித்து, விநியோகத்தில் பாதிக்கக்கூடும். ஒரு சிறிய நடவடிக்கை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுங்கள். அத்தியாவசியமற்ற முன்பதிவுகளை தவிர்க்க வேண்டும். எங்கள் பணியாளர்களும், விநியோகஸ்தர்களும் இந்தியா முழுவதும் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர்கள் சென்றடைவதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளனர். இவ்வாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
நமது வாசக - எரிவாயு உபயோப்பாளர் கருத்துக்கள் தற்போது நிலவும் யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
ஒரு வாசகர் கூறியது போல நானும் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து / இன் வாய்ஸ் மற்றும் ஓடிபி பெறப்பட்டும் சிலிண்டர் விநியோகம் செய்யவில்லை.
சிலிண்டர் விலை உயர்வு ஒரு புறம்/ அதனுடன் தட்டுப்பாடு செயற்கை? மறுபுறம்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
சிலிண்டர் விநியோகம் தடை இன்றி தொடர்கிறது என்பதுதான் உண்மை
25 தினங்கள் இடைவெளி இருந்தால் தான் அடுத்த புக்கிங் செய்ய முடியும்
புக் செய்வதற்கு மொபைல் நம்பரில் லைன் கிடைப்பது இல்லை.பலமுறை முயற்சி செய்யும்போது கிடைக்கிறது. நான் மார்ச் 13 புக் செய்தேன் மார்ச் 16 சிலிண்டர் கிடைக்க பெற்றேன்
அதிகமான போன் கால்ஸ் ஒரே சமயம் செல்வதால் லைன் கிடைக்க சிரமம் உள்ளது, பல முறை முயற்சி செய்தால் லைன் கிடைக்கிறது இது எனது சொந்த அனுபவம்
Civil Supplies Dept should conduct audit and cancel the license of Distributors who are selling domestic cylinders at higher rate for Commercial use. Domestic consumers are unable to book for refill cylinder as phone line is kept out of connectivity.
Indian Oil website relating to LPG booking has crashed and is not functional for the last one week. Whilst we can understand the supply constratints, please stop the false narratives and mislead the gullible users.
Wrong narrative by the oil companies. I booked a refill on 7th and I am awaiting to get the refill. But a friend of mine booked a refill on 10th and got the same on 15th from the same agency. How is this possible unless there are malpractices. While I contacted the agency they confimred that whilst my order is pending, the order subsequently booked had been delivered. Better the Govt come clean on this matter. If there is an enquiry, I am willling to provide documentary evidences for whatever I had stated
முற்றிலும் தவறான தகவல். எனக்கு மாதம் ஒரு சிலிண்டர் தேவைப் படுகிறது. மாதாமாதம் பத்து தேதிக்கு புக்கிங் செய்து வாங்கிக் கொள்வேன். இந்த மாதமும் பத்தாம் தேதி புக்கிங் செய்ய முயன்றேன். முடியவில்லை. இன்டேன் கம்பெனியின் போன் சுவிச் ஆப் ஆகி விட்டது. மிஸ்டு கால் மூலம் புக்கிங் செய்ய முயன்றேன். வாட்சப் மூலம் முயன்றேன். எதுவும் நடக்கவில்லை. பல முறை முயன்றும் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியவில்லை. நேரடியாக ஏஜென்சிக்கு சென்ற போது அங்கு கதவை மூடி வைத்து விட்டு உள்ளே ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தனர். வாசலில் ஒரு போர்டை மாட்டி விட்டு அந்த போன் நம்பர் மூலம் புக்கிங் போடுங்கள் என்று பொறுப்பில்லாமல் பதில் கூறினார்கள். இன்றுடன் எட்டு நாள் ஆகி விட்டது. திடீரென்று இரண்டு நாள் முன்பு இரவு ஒன்பது மணிக்கு வாட்சப் மூலம் எப்போதும் புக்கிங் செய்வது போல பதிவு செய்ய முடிந்தது. கட்டணம் செலுத்த வழக்கம் போல வரும் தகவலும் வந்தது. பணமும் கட்டினேன். பணம் வந்தது என்று குறுந்தகவல் வந்தது. இன்று மூன்றாவது நாள் எந்த தகவலும் இல்லை. பணம் போச்சா இல்லையா ? சிலிண்டர் வருமா ? இல்லை பணம் அம்பேலா என்று தெரியவில்லை. அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. பேட்டி மட்டும் பலமாக உள்ளது. இரண்டாயிரம் கொடுத்தால் உடனே கிடைக்கும் என்ற பேச்சு காற்றில் வந்தது. இதை திராவிடத்தின் விளையாட்டு என்று எடுத்துக் கொள்வதா ? இல்லை இன்டேன் கம்பெனியே இப்படி செய்கிறது என்று எடுத்துக் கொள்வதா ? இல்லை உள்ளூர் ஏஜன்சி செய்யும் உள்ளடி வேலையா ?
அப்பட்டமான பொய். காஸ் புக்கிங் தொலைபேசி எண் 7718955555 வொயர் அறுந்து 1 வாரம் ஆகி விட்டது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
காஸ்ஐ பக்கெட்லயும் பாட்டில்லையும் புடிக்க முடியலை...... இல்லைனா இதையும் புடிச்சிருப்போம்.... ஹி ஹி
நம்பலாமா.
இந்தியாவே நம்புது
We wont believe the statement of the concerned company/ authorities in power. But we will only believe the persons who spread panic with vested interests. God also cant save us as we dont believe Him too especially a particular communitys God, in the name of .....
very true sir. there are people who always love for negative news