2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துள்ளனர். இதனால், நம் நாட்டில் அதன் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,760 ரூபாய்க்கும், சவரன், 1,18,080 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 16), தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,17,680 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்து, 276 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் சரிவடைந்து, 2.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலை உயர்வு
வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2.80 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
அது என்ன கூடும்போது அளவுக்கு அதிகமாக கூடுகிறது... குறையும் போது 100 200 300 400 என்று சிறிய அளவில் குறைகிறதுமேலும்
-
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
-
மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்
-
ரூ.1.60 லட்சம் பறிமுதல்
-
சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன
-
தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
-
'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '