ஈரான் போரில் அமெரிக்க வீரர்கள் பலி 13 ஆக அதிகரிப்பு; 200 பேர் காயம்
நமது நிருபர்
மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில், இதுவரை அமெரிக்க வீரர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200 பேர் காயம் அடைந்துள்ளனர் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ஈரானில் 200 பெண்கள், 200 குழந்தைகள் உட்பட 1,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், இஸ்ரேலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், லெபனானில் மேலும் 886 பேர் இறந்துள்ளனர். நடந்து வரும் மோதலில் லெபனானிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் மூன்று வாரங்களாக நடந்த சண்டையில் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்பு, ராணுவ ஜெட் விமானங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து, இதுவரை அமெரிக்க வீரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயம் அடைந்துள்ளனர் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காயம் அடைந்த ராணுவ வீரர்களில் பெரும்பாலானவை சிறியவை.
180க்கும் மேற்பட்ட வீரர்கள் சிகிச்சை பெற்று குணமாகிய பிறகு பணிக்குத் திரும்பிவிட்டனர். மீதமுள்ள 20 பேரில் 10 பேருக்கு மட்டும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் ஒரு சில நாட்களில் மீண்டும் பணிக்கு திரும்பிவிடுவார்கள் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது வெறும் ஆரம்பம்தான் இது நீண்ட கால போராக மாறினால் இஸ்ரேல் முற்றாக அழியும் அமெரிக்க பலத்த சேதத்தை சந்திக்கும் ..இதனை அறிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தேவையில்லை.
ரஷ்யா போல அமெரிக்காவும் துண்டு துண்டாக உடைந்தால்தான் பெரியண்ணன் திமிர் அடங்கும். ராணுவ வீரர்கள் இறப்பு எண்ணிக்கை கூடினால் தானாகவே அமெரிக்காவில் கலவரம் ஏற்படும். இது கடந்த கால வரலாறுமேலும்
-
ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலரும் மரணம்: இஸ்ரேல் அறிவிப்பு
-
புதுச்சேரியில் கட்சிகளின் கூட்டணியில் இழுபறி; 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காடடாத வேட்பாளர்கள்
-
ராஜ்யசபாவில் யார் கை ஓங்கியுள்ளது? தேஜ கூட்டணி ஆதிக்கம், எதிர்க்கட்சிகள் பின்னடைவு
-
படுகொலையை ராணுவ நடவடிக்கையாக மாற்ற முயற்சி: பாக்.,கிற்கு இந்தியா கடும் கண்டனம்
-
காஸ் சிலிண்டர்- பயோமெட்ரிக் ஆதார் சரி பார்ப்பு கட்டாயமில்லை; அறிவித்தது மத்திய அரசு
-
நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி