பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி முறிவு? புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சிக்கல்
புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் ல.ஜ.க., வை சேர்க்க என்.ஆர்.காங்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், புதுச்சேரியில் பா.ஜ., -என்.ஆர்.காங்., கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை (ல.ஜ.க.,) சேர்த்து, 2 தொகுதிகளை ஒதுக்க பா.ஜ., விரும்புகிறது. ஆனால், கூட்ட ணியில் ல.ஜ.க.,வை சேர்க்க என்.ஆர்.காங்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், கூட்டணிக்கு முன்பாக, புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக உறுதிமொழியை தர வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமி பா.ஜ., வுக்கு கண்டிஷன் போட்டியிருந்தார். ரங்கசாமியின் நிபந்தனையை பா.ஜ., மேலிடத்திற்கு மத்திய அமைச்சர் மண்சுக் மண்டவியா கொண்டு சென்ற நிலையில், பா.ஜ., மேலிடம் மவுனம் சாதித்து வந்தது.
இதற்கிடையில் ஏனாம் சென்றிருந்த முதல்வர் ரங்கசாமி நேற்றிரவு 9:௦௦ மணிக்கு புதுச்சேரி திரும்பினார். அதேவேகத்தில் புதுச்சேரி அரசியல் நிலவரம், கூட்டணி நிலவரம் தொடர்பாக திடீரென என்.ஆர்.காங்., எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டோம் இன்னும் தரவில்லை. கூட்டணியில் ல.ஜ.க. வை சேர்க்க கூடாது என்று சொல்கிறோம், ஆனாலும் கேட்கவில்லை என, பா.ஜ.,விடம் தான் போட்ட நிபந்தனைகளை நிர்வாகிகளிடம் பட்டியலிட்டு புலம்பியுள்ளார். அப்போது, இனியும் கூட்டணியில் என்.ஆர்.காங்., தொடர வேண்டுமா என்று கேட்டுள்ளார். ரங்கசாமியின் ஆதங்கத்தை, என்.ஆர்.காங்., எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
என்.ஆர்.காங்., முடிவை, பா.ஜ.,விடம் தெரிவிக்க, அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று இரவு 10:௦௦ மணியளவில் ஓட்டல் அக்கார்டில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ல.ஜ.க.,வை, கூட்டணியில் சேர்க்க கூடாது. அப்படி கூட்டணியில் சேர்த்தால் என்.ஆர்.காங்., வெளியேறும். இது தான் எங்கள் கட்சியின் முடிவு என்று அழுத்தமாக தெரிவித்துவிட்டு வௌியேறினர். இதனால் புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., -என்.ஆர்.காங்., தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் மத்திய அமைச்சர் மண்சுக் மாண்டவியா அவசர அவசரமாக ஆலோசனை நடத்தினார்.
காரணம் என்ன
முதல்வர் ரங்கசாமி, என்.ஆர்.காங்., கட்சியை ஆரம்பத்தில் கடுமையாக விமர்சித்து வந்த ல.ஜ.க., திடீரென பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்தது, என்.ஆர்.காங்., கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் தேசிய ஜன நாய கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு தலைவர். என்னிடமே கலந்து ஆலோசிக்காமல் ல.ஜ.க.,வை கூட்டணியில் சேர்த் தது ஏன் என்று முதல்வர் ரங்கசாமியும் கேள்வியை எழுப்பி அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.
ஆனாலும் ல.ஜ.க., வை சேர்ப்பதில் பா.ஜ., உறுதியாக உள்ளதாக தெரிகிறது. எங்களால் தான் ஆட்சி நடத்தினீர்கள். நலத்திட்டங்களை வாரி கொடுத்தீர்கள். விருப்பம் இருந்தால் கூட்டணி பற்றி பேசுவோம் என்று தடாலடியாக பா.ஜ., தெரிவித்து இருந்தது. அதனையடுத்து தான் என்.ஆர்.காங்., அவசர அவசரமாக இப்போது ஆலோசனை நடத்தி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும். ல.ஜ.க.,வை கூட்டணி யில் சேர்க்க கூடாது.
இல்லையெனில், கூட்டணியை முறித்து கொண்டு களத்தில் எதிரியாக சந்திப்போம் என்று என்.ஆர்.காங்., கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. ஒரிரு தினங்கள் பா.ஜ., வின் மேலிட முடிவிற்கு காத்திருக்க முடிவு செய்துள்ளது. சாதகமாக பதில் வரவில்லையென்றால் தனியாக நிற்கவும், அனைத்து தொகுதிக்கும் 23ம் தேதி மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
@block_G@
பா.ஜ., கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்., கட்சி வெளியேறி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், மத்திய பா.ஜ., இருப்பதால் சிக்கல்தான். கூட்டணியில் இருக்கும்போதே கவர்னர், அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர். கூட்டணியில் இல்லையென்றால் நெருக்கடி ஏற்படும் என, ரங்கசாமிக்கு விசுவாசிகள் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.
அனைத்தையும் கேட்டுக்கொள்ளும் முதல்வர் ரங்கசாமி, சித்தன்போக்கு சிவன்போக்கு என்று அமைதியாக அனைத்தையும் அசைபோட்டு வருகின்றார். ரங்கசாமி எந்த முடிவு எடுத்தாலும் அப்பா பைத்திய சாமி முன் குலுக்கல் சீட் போட்டு தான் முடிவு எடுப்பார்.
எனவே ரங்கசாமி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது அப்பா பைத்திய சாமிக்கு தான் வெளிச்சம். எப்படி இருந்தாலும் ஒரிரு தினங்களில் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி தொடருமா.. தொடராதா என்று முடிவு வந்துவிடும் என்கின்றனர் என்.ஆர்.காங்., நிர்வாகிகள்.block_G
@block_Y@
என்.ஆர்.காங்., கூட்டணியில் வெளியேறினால் 17 இடங்களில் பா.ஜ., நிற்கும். ல.ஜ.க., அ.தி.மு.க.,விற்கு தலா 6 இடங்களும், பா.ம.க., 1 சீட்டினை கொடுத்து தனி அணியாகவும் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ., மேலிடத்திடம் விவாதிக்கப்பட்டுள்ளது.block_Y
@block_P@
கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., உடன் கூட்டணி வைத்த பா.ஜ., இந்த முறை தெளிவாக உள்ளது. பா.ஜ., தொகுதியை தவிர்த்து, என்.ஆர்.காங்., தி.மு.க., காங்., தொகுதிகளில் ல.ஜ.க, ஏற்கனவே எம்.எல்.ஏக்களையும், முக்கிய அரசியல் பிரமுகர்களை இழுத்துவிட்டது. எனவே கூட்டணிக்கு என்.ஆர்.காங்., வரவில்லையென்றால் தங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. ல.ஜ.க., அ.தி.மு.க., இணைந்து ஒரு அணியாக தேர்தலை தனியாகவே சந்தித்து விடலாம் என்று பா.ஜ., மேலிடம் கணக்கு போட்டுள்ளது. இதனால் ரங்கசாமி கண்டிஷன் போட்ட மாநில அந்தஸ்து, ல.ஜ.க., வை கூட்டணியில் சேர்க்க கூடாது என்றகோரிக்கை கண்டுக் கொள்ளவே இல்லை.
ல.ஜ.க., சேர்க்க கூடாது என்று என்.ஆர்.காங்., நிபந்தனை விதித்துள்ள சூழ்நிலையில் புதுச்சேரிகூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க பா.ஜ., தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை டில்லிக்கு அவசர அவசரமாக வர பா.ஜ., மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று டில்லிக்கு அவர்கள் விரைகின்றனர்.block_P
நல்ல முடிவு
வாழ்த்துக்கள் முதல்வர் சார்
விஜய் உடன் சேருங்க மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் ஆக வாழ்த்துக்கள்
...என்று ஒரு அரசியல் கட்சி அங்கு உள்ளதா?
ரங்கசாமி ஏன் இப்படி நடந்துகொள்கிறார்?
நாளை நிதிஷ் க்கு ஆனது தனக்கு ஆகிவிட போகுது என்கிற பயம் தான்
ரொம்ப நல்லது ரங்கசாமி, பீசப்பியை கழட்டி விடுங்கள் விஜய் உடன் கூட்டணி வையுங்கள், இனி தென் மாநிலங்களில் பீசப்பி இல்லா மாநிலமா உருவாக்குவோம்
காற்றுல்ல்ஸ் போதா தூற்றி கொள்வது என்பது இதுதானோ ?
உண்மையில் அப்படி என்ன தான் பிரச்சனையோ இருப்பது 30 தொகுதி இதற்கே PROBLEM
தெரிந்த வரையில் என் ஆர் சி கட்ச் விஜய் கட்சி யுடன் பேசி வருகிறது. அதனால் தான் பிஜேபி உடன் கூட்டணி உடைக்க படலாம்
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு ஒரு ஆயுதம் போல பாண்டிச்சேரியில் தனிமாநில கோரிக்கை ஒரு ஆயுதம். அது தேர்தல் வரை தூங்கும். தேவையாக இருந்தால் கும்பகர்ணன் போல விழித்துழும். இரண்டு நாள் முன்பு லட்டர்பேடு கட்சி ஒன்று தமிழகத்தில் இல்லாத திமுகவின் ஊதுகுழலாக இந்தி எதிர்ப்பை கிளப்ப முயன்றார். அது புஸ்வானம் ஆகி விட்டது. இப்போது கைது நடவடிக்கைகளால் அந்த லட்டர் பேடு கட்சியினர் கலங்கி நிற்கின்றனர். இப்போது ஸ்டாலின் அவர்கள் முதல்வராக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதை மெல்லமாக புரிந்து கொண்டு ஓடுகின்றனர் இந்த புல்லுருவிகள். இப்போது தேர்தலுக்காக முதல்வர் ரங்கசாமியே தேய்ந்து போன மாநில அந்தஸ்து என்கிற ஆயுதத்தை எடுக்கிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவையே இல்லை. அனைத்து உதவிகளும் கேட்டவுடன் மத்திய அரசில் இருந்து கிடைக்கப் போகிறது. இவர்கள் தங்கள் தலையில் மகுடம் சூட்டிக் கொண்டு வளம் வர அரசியல்வ்யாதிகள் விரும்புகிறார்கள். ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் அளவுக்கு மக்கள் தொகை உள்ள இடத்திற்கு எதற்கு ஒரு அரசாங்கம் ? தேவையே இல்லை.
இந்தியாவை அவர்கள் மட்டுமே ஆள நினைக்கும் செயல்பாடே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நல்லது பாண்டிச்சேரிக்குமேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!