நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி

27

சென்னை: நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: மக்களுக்கு இபிஎஸ் மீது நம்பிக்கை இல்லை; அரசு மீது நம்பிக்கை இருப்பதால் தான் பெண்கள் துணிந்து புகார் அளிக்கின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் காவல் துறை கூறியுள்ளது.


திமுக கூட்டணிக்கு 80% பெண்கள் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு அதை தடுக்க சதி செய்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற போலி நாடகத்தை நடத்த முயற்சி நடக்கிறது. ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார், அவருக்கு என ஒரு ரசிகர் மன்றம் எல்லாமே இருக்கிறது. அவரை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்று நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம்.


அன்புக்கு மட்டும் தான் ரஜினிகாந்த் அடிபணிவார், மிரட்டலுக்கு அவர் அடிபணிய கூடியவர் அல்ல என்று உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். திமுகவிற்கு வேண்டிய நெருங்கிய நண்பர். எங்களுக்காக 1996ல் குரல் கொடுத்தவர். அவரை மிரட்ட வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது.


கரூர் சம்பவத்தில் இன்னொரு கட்சி தலைவர் செந்தில் பாலாஜி மீது சில குற்றச்சாட்டுளை கூறியதால் அவரை சிபிஐ அழைத்துள்ளது. அதற்கு தகந்த விளக்கதை கொடுக்க கூடிய தைரியம் செந்தில்பாலாஜிக்கு இருக்கிறது. அதற்கு தகுந்த விளக்கத்தை அங்கு அவர் தருவார். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

Advertisement