புதுச்சேரியில் கட்சிகளின் கூட்டணியில் இழுபறி; 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஆர்வம் காடடாத வேட்பாளர்கள்

புதுச்சேரி; புதுச்சேரியில் 2வது நாளாக இன்றும் யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் அண்மையில் அறிவித்தது. தேதிகள் வெளியாகிவிட்ட சூழலில், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

அதில், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று யாரும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 2வது நாளான இன்றும் அதே சூழல் தான் புதுச்சேரியில் நிலவுகிறது.

இன்றும் ஒருவர் கூட வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அலுவலகத்தில் வேட்புமனுவை பெற்று சென்றிருக்கின்றனர்.

புதுச்சேரியில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணியில் நீடிக்கும் இழுபறியே வேட்பு மனு தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு காரணமாகும். கூட்டணிகள் இறுதியாகும் பட்சத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement