தமிழக எல்லையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

பந்தலுார்: கூடலுார் சட்டசபை தொகுதியில், தேர்தல் பறக்கும் படையினருடன் துணை ராணுவத்தினர், 18 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகள், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லை பகுதியாக உள்ளன. இங்குள்ள, 11 சோதனை சாவடிகளில், 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தேர்தல் பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பை சேர்ந்த துணை ராணுவத்தினர், 18 பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கூடலுார் ஆர்.டி.ஓ. குணசேகரன் கூறுகையில், ''வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பது குறித்து தெரிய வந்தால், பொதுமக்கள் தகவல் கூறி ஒத்துழைக்க வேண்டும்,''என்றார்.

Advertisement