குதிரையேற்ற சாகச போட்டி பெண் அதிகாரிகள் அசத்தல்
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி மற்றும் மவுண்டன் ஜிம்கானா சார்பில், ஜிம்கானா மைதானத்தில், பெண் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகளின் குதிரையேற்ற சாகசம் நடந்தது.
தேசிய கொடி மற்றும் ராணுவ கொடிகளை ஏந்தி நின்ற நிலையில் வீராங்கனைகள் வீர வணக்கம் செலுத்தினர். போட்டிகளில், 40க்கும் மேற்பட்ட பெண் வீராங்கனைகள், பள்ளி மாணவிகள் மற்றும் ராணுவ பெண் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், 'ஹை ஜம்ப், லிப்ட் ஜம்ப்' மற்றும் குதிரை ஓட்ட பந்தயங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 81-வது ஸ்டாப் கோர்ஸ் மற்றும் டி.எஸ்.எஸ்.சி., குதிரையேற்ற கிளப் பெண்களின் சிறப்பு குதிரை சவாரி, தைரியத்தையும் திறமையையும் பறைசாற்றுவதாக இருந்தது.
சிறுவர்களுக்கான மாறுவேட போட்டியில், போனி குதிரைகள் மீது அமர்ந்தவாறு குழந்தைகள் வலம் வந்தனர். மாவீரன் நெப்போலியன், ஜான்சிராணி மற்றும் கவ்பாய் உள்ளிட்ட வரலாற்று கதாபாத்திரங்களை ஏற்று குழந்தைகள் அசத்தினர். குழந்தைகளில் தீஸ்தா சிங், மாஸ்டர் ஆல்பி, இளையோர் பிரிவில் சர்வேஷ், அனுவா உள்ளிட்டோர் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தனர்.
வெற்றிபெற்ற வீராங்கனைகள் மற்றும் குழந்தைகளுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி அதிகாரி மனைவி உமாதேவி பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!