கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் வண்ண ஓவியம்

கோத்தகிரி: கோத்தகிரி குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், பட்டாம்பூச்சி குழுவினரால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் மாணவர்களை கவர்ந்துள்ளது.

இப்பள்ளியில் கட்டடங்கள் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வகுப்பறைகளில் பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. வெளிப்புற பக்கவாட்டு சுவர்கள் மழை மற்றும் வெயிலில் பாதிக்கப்பட்டன. 'இதன் சுவர்களில் ஓவியங்கள் வரைய வேண்டும்' என, பள்ளி ஆசிரியை ரேணுகா பட்டாம்பூச்சி ஓவிய குழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, 'திருப்பூர் ரோட்டரி கிளப் மெரிடியன்' பொறுப்பாளர்களிடம் உதவி கேட்கப்பட்டது. அவர்கள், 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வண்ணங்களை வாங்கி கொடுத்தனர்.

அதன்படி, பட்டாம்பூச்சி குழு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார் தலைமையில், பள்ளி ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், பிரபு, கார்த்திகேயன், காளிதாஸ், செந்தில்குமார், மூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர் வருண்பாபு ஆகியோர் விடுமுறை நாட்களில், பள்ளிக்கு வந்து வண்ணம் அடித்து, மாணவர்களுக்கு பிடித்தமான ஓவியங்கள் மற்றும் வகுப்பறையினுள் பாடம் சார்ந்த ஓவியங்களை வரைந்து கொடுத்தனர். இதனால், மாணவர்கள் கல்வியில் ஊக்கம் அடைவதுடன், மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement