திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. கடும் இழுபறிக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 4 தொகுதிகளில் அதிமுக கூட்டணியிடம் தோல்வி அடைந்தது. இப்போது தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே திமுகவிடம் ஒரு தொகுதியை பறிகொடுத்துள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;
* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)
* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)
* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)
* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)
* கொமதேக - 2 தொகுதி (1 குறைப்பு)
* இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)
@block_P@
நிருபர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது: திமுக ஒருபோதும் ஒரு நடிகரையோ, அல்லது கூட்டணி கட்சிகளையே மிரட்டியதில்லை. பாஜ.,வை வீழ்த்துவதே இலக்கு, முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கொள்ள முதல்வர் கேட்டார். இதனால் தான் 5 தொகுதிகளாக குறைத்து கொண்டோம். நாங்களும் இடங்களை குறைத்து தான் போட்டியிடப்போகிறோம் என முதல்வர் ஸ்டாலினும் கூறினார்.
5 இடம் தான் என்பது கட்சி நிர்வாகிகளை சோர்வடையச் செய்யும். ஆனாலும் அரசியல் நிலையில் இருந்து விலகமாட்டோம். சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படவில்லை; திமுக அதுபோன்று கட்டளை இடவில்லை. 4 கட்ட பேச்சுவார்த்தையிலும் திமுக எங்களுக்கு அழுத்தம் தரவில்லை.
பரிசீலனை செய்யுங்கள் என்றுதான் கூறினார்கள். நடிகை குறித்து சி.வி.சண்முகம் பேசியது கண்ணியமல்ல; அதனை கண்டிக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் குறித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கருத்தை கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.block_P
காரம் சிறிசானாலும் கடுகு குறையாது என்பது அப்பனின் பழமொழி. சீட் கொறைஞ்சாலும் பொட்டி கொறையாது என்பது அடிமைகளின் புதுமொழி
பாஜக கூட்டணிக்கு ஆதரவா... தி.மு.க.வுக்கு எதிராக “சிறுத்தது”... “பெருகியது”...ன்னு நீ என்ன கொளுத்தி போட்டாலும், சில்லுண்டி வேலை பார்த்தாலும் அங்கே ஒண்ணும் வேலைக்கு ஆகாது...?
அதிமுக கூட்டணியில் முன்பு பிஜேபிக்கு கொடுத்த 20 தொகுதிகளுக்கு மாறாக இந்த தேர்தலில் 40 தொகுதி கொடுத்தால் அதிமுக சிறுத்தது தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளை இழந்தது என்று செய்தி வருமா
அந்த போட்டோ வில் இருக்கும் முகங்களை பார்க்க பாவமாக இருக்கிறது
மக்களாட்சியில் மக்களிடம் குணிந்து கும்பிடு போட்டு வாக்கு கேட்கிறார்கள் என்பதால் கட்சி தலைவர்கள் மக்களிடம் அடிபணிந்து விட்டார்கள் என்று எண்ணுவது அறிவீனம்.
திமுக தான் கட்சிகளை விழுங்கி கொண்டிருக்கிரது பிஜேபி மதவாதம் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி எல்லாரயும் முட்டாளாக்கி
தலைப்பு கொடுப்பதில் தினமலர் நாளிதழை அடிச்சிக்க முடியாது. இதே மாதிரி அதிமுக-பிஜேபி கூட்டணிக்கும் பாரபட்சம் இன்றி தலைப்புகள் கொடுத்தால் சிறப்பாய் இருக்கும்.
கம்மீக்களுக்கும் சுயமரியாதைக்கும் என்ன சம்பந்தம்? இல்லாததைப்பற்றி ஏன் வீண் பேச்சு?
அடுத்த தேர்தலில் உங்கள் எல்லோருக்கும் ஒரு சீட் தான் கிடைக்கும். அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்மேலும்
-
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல்; ஈரான் மீது டிரம்ப் ஆத்திரம்
-
இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு; 4 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு