தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
பொள்ளாச்சி: கேரளாவில் இருந்து அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்களை நிலையான தணிக்கை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என நிலையான தணிக்கை குழு, பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், மீன்கரை ரோட்டில் நிலையான தணிக்கை குழுவினர் ஆய்வு செய்த போது, அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பாலக்காட்டை சேர்ந்த ஷாஜி என்பதும், கேரளாவில் இருந்து அனுமதியின்றி மதுபாட்டில்களை வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடித்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் பறக்கும்படை, நிலையான தணிக்கை குழுவினர் வாகன தணிக்கை செய்கின்றனர். கடந்த, 15ம் தேதி முதல், நேற்று வரை 10 லட்சத்து, 88 ஆயிரத்து, 570 ரூபாய் கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்களோடு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆவணங்கள் இல்லாவிட்டால் பணம் கைப்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நெகமம் - பல்லடம் ரோட்டில் செல்லும் வாகனங்களை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதே போன்று, கிணத்துக்கடவு, வீரப்பகவுண்டனூர் செக்போஸ்ட் வழியாக வந்த சரக்கு வாகனத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கோவையை சேர்ந்த சிவா சுந்தர், 25, என்பவர், 95 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்தார். பணத்துக்கான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆட்டோவில் போனவன் ஆஸ்பத்திரிக்கு போனவன புடிங்க புடிக்க வேண்டியவர்களை புடிக்காமல் ..... இருங்க......மேலும்
-
புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் பெற்றும் உணவு பொருட்கள் வாங்க முடியாத அவலம்
-
கணக்கு தேர்வில் பிணக்கு இல்லை
-
தொழிலாளி பலி
-
' ஹெராயின் ' கடத்திய தம்பதி கைது
-
பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு வராத ஓய்வு கூடம் முதல்வர் ஸ்டாலின் திறந்து 19 நாட்களாகியும் அவலம்
-
பரமக்குடியில் 36 வார்டுகளில் 618 நாய்கள் கணக்கெடுப்பு கு.க., பணி தீவிரம்