ரூ.1.60 லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ரூ.1.60 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் சட்டமன்ற தொகுதியில் 9 பறக்கும் படைகள் குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்று ஜடையம்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் பறக்கும் படையினர் சோதனையின் போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், 35, என்பவரை சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து, 60 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். -----

Advertisement