மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்

கோவை: மால் ஒன்றில் வாங்கிய சிக்கன் லாலிபாப்பில், புழு இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன், உணவு பாதுகாப்பு துறைக்கு நேற்று புகார் அளிக்கப்பட்டது.

மதுக்கரையை சேர்ந்த சசிக்குமார் என்பவர் நேற்று இரவு (மார்ச் 16ம் தேதி), அவிநாசி ரோட்டில் உள்ள மால் ஒன்றில், 250 கிராம் சிக்கன் லாலிபாப் வாங்கியுள்ளார்.

தன் இரு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். அப்போது அதில் புழு இருந்ததை பார்த்துள்ளனர். சிறிது நேரத்திலே குழந்தைகள் வாந்தி எடுத்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். இன்று, உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''குறிப்பிட்ட மாலில் அளிக்கப்பட்ட இறைச்சி கெட்டு போனதா, முறையாக குளிரூட்டப்படாமல், சூடுபடுத்தாமல் வழங்கப்பட்டதா என ஆய்வு செய்யப்படும். உணவு மாதிரி, ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்,'' என்றார்.

Advertisement