ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பூலுவபட்டி, சிறுவாணி மெயின்ரோட்டில் நேற்று, பறக்கும் படை அலுவலர் வாசுகி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.
அவ்வழியாக வந்த பூலுவபட்டியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரின் காரை சோதனை செய்தபோது, அதில் எவ்வித ஆவணங்களுமின்றி, 1.20 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பேரூர் தாசில்தார் சேகரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல, கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குப்பட்ட பேரூர் செட்டிபாளையம், ஜி.வி.எல். நகரில் உள்ள கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளரான தியாகராஜன் என்பவர், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பறக்கும்படை அலுவலர் சந்தோஷம் தலைமையிலான குழுவினர், தியாகராஜன் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த, 38 எவர்சில்வர் அண்டா, 24 மூடிகள், தி.மு.க.கட்சி சின்னம் பொறித்திருந்த 75 பைகளை பறிமுதல் செய்து, மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும்
-
புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் பெற்றும் உணவு பொருட்கள் வாங்க முடியாத அவலம்
-
கணக்கு தேர்வில் பிணக்கு இல்லை
-
தொழிலாளி பலி
-
' ஹெராயின் ' கடத்திய தம்பதி கைது
-
பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு வராத ஓய்வு கூடம் முதல்வர் ஸ்டாலின் திறந்து 19 நாட்களாகியும் அவலம்
-
பரமக்குடியில் 36 வார்டுகளில் 618 நாய்கள் கணக்கெடுப்பு கு.க., பணி தீவிரம்