கோவில் உண்டியலில் கொள்ளை

சேலம்:சேலம், அழகாபுரம், காட்டூர் பிள்ளையார் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணம் உள்ளிட்ட காணிக்கை பொருட்களை கொள்ளையடித்தனர்.

தொடர்ந்து அந்த கும்பல், நகரமலை அடி-வாரத்தில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலுக்கு வந்து, அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு, மக்கள் வர, மர்ம கும்பல் தப்பியது. அழகாபுரம் போலீசார், அருகே உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்-சிகளை வைத்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், ஒருவர் உண்-டியலை உடைத்து பணம் கொள்ளை அடித்த, 'சிசிடிவி' காட்சி, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி, போலீசார் விசாரிக்கின்-றனர்.

Advertisement