கள்ளக்குறிச்சி 4 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர் தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப் படுவர்.
தொகுதியில் தேர்தல் செயல்முறைகள் முழுமையாக நிர்வகித்தல், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், வேட்புமனு பெறுதல், மனு மீதான பரிசீலனை, சின்னம் ஒதுக்குதல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் உட்பட பல்வேறு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்வர். அதன்படி, கள்ளக்குறிச்சி உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார் உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி ரிஷிவந்தியம் தொகுதிக்கும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிராஜ்தீன் சங்கராபுரம் தொகுதிக்கும், ஆர்.டி.ஓ., முருகன் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தாசில்தார் அலகில் பணிபுரியும் 2 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் செல வின பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு