தாகத்துக்கு தண்ணீர் குடிக்கும்போது கவனம்; எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்

கோவை: வெயில் காலம் துவங்கிவிட்ட நிலையில், முறையாக சுத்திகரிக்கப்படாத குடிநீரை அருந்தினால், டைபாய்டு காய்ச்சல் வரலாம் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

டைபாய்டு காய்ச்சல் 'சால்மோனெல்லா டைபி' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா, அசுத்தமான தண்ணீர், கெட்டுப்போன உணவு சாப்பிடும் போது தாக்குகிறது.

இதனால், அதிக காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, மலசிக்கல், உடல்சோர்வு, பசியின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகள், காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை குடிப்பதுடன், திறந்தவெளி விற்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''டைபாய்டு காய்ச்சல் அறிகுறி இருந்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

@block_B@

எதை தவிர்க்கலாம்?

ஐஸ், பழரசம் ஆகியவை எந்த தண்ணீரில் தயாராகிறது எனத் தெரியாததால் தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் இருக்கும் குடிநீர், திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகள், ஈ மொய்த்த பழங்கள், துரித உணவுகள் தவிர்க்க வேண்டும். பொதுகழிப்பறை பயன்படுத்திய பின், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.block_B

Advertisement