உதவித்தொகைக்கு பாதிப்பில்லை
கோவை: ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சுமார் 34.6 லட்சம் பேர் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கீழ் 8,778 பேரும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11,000 பேரும் உதவித்தொகை பயனாளர்களாக உள்ளனர்.
இவர்களுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2,000 வரையும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் நடத்தை விதிகளால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைகளுக்கு தடை இல்லை. பயனாளிகளின் வங்கி கணக்குகளில் உதவித்தொகை வழக்கம்போல் தாமதமின்றி செலுத்தப்படும்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை மேல்சபையில் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விளக்கம்
-
கள்ளக்காதலியை கொலை செய்தவர் ஆந்திராவின் ஸ்ரீசைலத்தில் கைது
-
தேனீக்கள் கொட்டி விவசாயி மரணம்
-
வருமான வரி அதிகாரிகளாக நடித்து ரூ.6 லட்சம் பறித்த 4 பேர் கைது
-
கந்தசுவாமி கோவில் விடையாற்றி உத்சவம் நிறைவு
-
கடம்பூர் கிராமத்தில் மின்சார திருட்டு 'ஜோர்'
Advertisement
Advertisement