கடம்பூர் கிராமத்தில் மின்சார திருட்டு 'ஜோர்'

மறைமலை நகர்: கட ம்பூர் பகுதியில் விவசாய நிலங்களில் செல்லும் மின் கம்பிகளில், மர்ம நபர்கள் சிலர் மின் ஒயர்கள் வாயி லாக மின்சாரம் திருடுவதாக புகார் எழுந்துள்ளது.

கா ட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சியில் கருநிலம், கடம்பூர் கிராமங்கள் உள்ளன. இங்கு 600 ஏக்கர் பரப்பளவில் ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக கிணற்று பாசனத்திற்கு சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலக வளாகத்தில் இருந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விவசாய நிலங்களில் செல்லும் மின் கம்பிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஒரு சிலர், மின் ஒயர்கள் வாயிலாக மின்சாரம் திருடி மின் மோட்டாரை இயக்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

ஏரி பாசனத்திற்கு வடிகால்வாய்களில் செல்லும் தண்ணீரை, சிலர் மின் மோட்டார்கள் வாயிலாக இரைத்து வருகின்றனர்.

இதனால் மற்ற விவசாயிகள், மின்சாரத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருநிலம் கிராமத்தில் விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்த மின்சார திருட்டு, மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது. இதற்கு மின்வாரிய உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement