கந்தசுவாமி கோவில் விடையாற்றி உத்சவம் நிறைவு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசு வாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, விடையாற்றி உத்சவம் நிறைவடைந்தது.

திருப்போரூர் கந்தசு வாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் தேதி திருக்கல்யா ணம் வைபவத்துடன் விழா நிறைவடைந்தது.

இதில், முக்கிய விழாவாக, கடந்த பிப்.,27ல் தேர்த் திருவிழாவும், மார்ச் 2ம் தேதி தெப்பதிருவிழாவும், 5 ம் தேதி திருக்கல்யாண உத்சவம் நடந்து முடிந்தது.

திருக்கல்யாணம் உத்சவம் நிறைவடைந்த நாளில் இருந்து, 13 நாட்களுக்கு, விடை யாற்றி உத்சவம் நடந்தது.

விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலி த்தார்.

தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்தார்.

Advertisement