படிக்காத மாணவர்களை படிக்க வைப்பதுதானே ஆசிரியர் வேலை? 49 மாணவர்களுக்கு டிசி; கல்வியாளர்கள் கொதிப்பு

கோவை: கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்திருந்தால், ஒண்டிப்புதுார் அரசு பள்ளியில் 49 மாணவர்களுக்கு டி.சி. வழங்கியது போன்ற சம்பவங்களை தடுத்திருக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூன் முதல் டிச., வரை 49 மாணவர்களுக்கு டி.சி. வழங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வற்புறுத்தலால் ஒரே ஆண்டில் இத்தனை மாணவர்களுக்கு டி.சி. வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை நடத்தினர். விரைவில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''நீண்ட நாள் பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்கள், வேறு பள்ளியில் சேர்ந்தவர்கள், தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்தவர்கள்என பல்வேறு காரணங்களால் மாணவர்கள் டி.சி.பெற்றுள்ளனர்.

மாணவர்கள் நீண்ட நாள் பள்ளிக்கு வராமல் இருப்பது இப்பகுதியில் அதிகம். இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, மாணவர்கள், பெற்றோர்களிடம் பேசி மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.

@block_B@

கல்வித்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?

பெயர் வெளியிட விரும்பாத கல்வியாளர் ஒருவர் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை,இடமாற்றம், மதிப்பெண் என எமிஸ் வலைதளத்தில் மாணவர்களின் தரவுகள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது. ஜூன் முதல் டிச. வரை 49 மாணவர்கள் டி.சி. பெற்றது சீரியசான பிரச்னை. முக்கியமாக, பொதுத்தேர்வு எழுதும் 20க்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் டி.சி. வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? முன்பே கண்காணித்திருந்தால் மாணவர்களை உடனுக்குடன் மீண்டும் பள்ளியில் சேர்த்திருக்கலாம். தேர்வுஎழுத வைத்திருக்கலாம். நன்றாக படிக்காத மாணவர்கள், இடைநிற்கும் மாணவர்களுக்கு டி.சி. வழங்கும் போக்கு அரசு பள்ளிகளிலும் அதிகரித்து வருகிறது. படிக்கத் தெரியாத மாணவர்களை படிக்க வைக்கத்தானே ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது?' என்கின்றனர்.block_B

Advertisement