அமைச்சர் பதவி கேட்க டில்லி செல்வோம் 40 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டாக பேட்டி
பெங்களூரு: ''அமைச்சர் பதவி வேண்டும் என, காங்கிரஸ் மேலிடத்திடம் கேட்பதற்காக, அடுத்த மாதம், 11ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள், 40 பேர், ஒரே விமானத்தில் டில்லி செல்கிறோம்,'' என, மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறினார்.
கர்நாடகாவில் முதல் வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இரண்டு முறை, மூன்று முறை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் பலர் அமைச்சராக உள்ளனர். நான்கு முறைக்கு மேல் வெற்றி பெற்ற, மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால், அவர்களில் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள காவேரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையாவை, சட்டசபை ஆளுங்கட்சி கொறடாவும், ராம்துர்கா எம்.எல்.ஏ.,வுமான அசோக் பட்டன் தலைமையில், மாகடி பாலகிருஷ்ணா, சாந்திநகர் ஹாரிஸ், பேலு ார் கோபாலகி ருஷ்ணா உட்பட, 40 எம்.எல்.ஏ.,க்கள் நேற்று காலை சந்தித்தனர். சீனியர் அடிப்படையில் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட னர்.
பின், விதான் சவுதாவில் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் கூட்டாக அளித்த பேட்டி:
நான்கு முறைக்கு மேல் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், 40 பேர் காங்கிரசில் உள்ளோம். கடந்த, 2023ல் கட்சி ஆட்சிக்கு வந்த போதே, எங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்து இருக்க வேண்டும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின், அமைச்சரவை மாற்றம் நடக்கும் போது, வாய்ப்பு வழங்குவதாக கட்சி மேலிடமும், முதல்வர், துணை முதல்வரும் கூறினர். அதனை நாங்களும் ஏற்றுக் கொண்டோம்.
தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், அமைச்சர் பதவி வழங்கும்படி முதல்வரிடம் கேட்டு உள்ளோம்.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், டில்லி சென்று மேலிடத்திடம் பேசுவதாக முதல்வர் உறுதி அளித்தார்.
நீங்களும் உங்களால் முடிந்த முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். அடுத்த மாதம் 11ம் தேதி மூத்த எம்.எல்.ஏ.,க்கள், 40 பேர், ஒரே விமானத்தில் டில்லி செல்கிறோம். மேலிட தலைவர்களை சந்தித்து அமைச்சர் பதவி கேட்க உள்ளோம். முதல்முறை எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பதவி கேட்பதில் தவறு இல்லை. அது அவர்கள் உரிமை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!