சிவகங்கையில் ரூ.ஒரு கோடி மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இரு வேறு நபர்களிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூபாய் ஒரு கோடி வரை மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே அ.தெக்கூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 29. இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளார். தற்போது சொந்த ஊரான தெக்கூரில் வசித்து வருகிறார்.
இவருக்கு பிப்.6 முகநுாலில் பகுதி நேர வேலை குறித்த விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றுள்ளார். உடனடியாக அவரை ஒருவர் வாட்ஸ் ஆப் காலில் தொடர்பு கொண்டு பேசி பகுதி நேர வேலை குறித்து கூறியுள்ளார்.
அவர் பேசியதை நம்பிய பாலசுப்பிரமணியன் அவருடன் தொடர்ந்து பேசியுள்ளார். அடையாளம் தெரியாத அந்த நபர் பாலசுப்பிரமணியனை ஒரு டெலிகிராம் குரூப்பில் இணைத்து அதில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்ற விவரத்தை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதை நம்பி பாலசுப்பிரமணியனும் அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு 57 தவணைகளாக ரூ.26 லட்சத்து 21 ஆயிரத்து 803 முதலீடு செய்துள்ளார்.
பணம் முதலீடு செய்ததற்கான லாபத்தொகை கொடுக்காமல் மீண்டும் பணம் முதலீடு செய்யக்கூறியதால் அவர் மீது சந்தேகம் பட்டு இழந்த பணத்தை மீட்டு தருமாறு பாலசுப்பிரமணியன் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஓய்வு ராணுவ வீரரிடம் ரூ.75.44 லட்சம் மோசடி சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் கருணாகரன் 58. இவர் பிப்.2 கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை முகநுாலில் பார்த்துள்ளார்.
அதில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் டெலிகிராம் மூலம் கருணாகரனை ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்துள்ளனர்.
அதில் டிரேடிங் செய்வதற்கான ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கு எண்களுக்கு 16 தவணைகளாக ரூ.75 லட்சத்து 44 ஆயிரத்து 68 பணம் முதலீடு செய்தார்.
அதன் பின்பு அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் கருணாகரன் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு