போதை மாத்திரை கடத்திய மூவர் கைது
பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், சித்துார் இன்ஸ்பெக்டர் முகமது ஷபீக் தலைமையிலான கலால் துறையினர், வேலந்தாவளம், மேனான்பாறை ரோட்டில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில், 2.8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 70.5 கிராம் மெத்தாபிட்டமின் என்ற போதை மாத்திரையும், 7 கிராம் கஞ்சாவும் மறைத்து வைத்திருப்பதை கண்டு
பிடித்தனர்.
விசாரணையில், காரில் இருந்தவர்கள், எர்ணாகுளம் பறவூர் பகுதியைச் சேர்ந்த முகமது மெஹஜூப், 32, சஹீர், 34, அலுவா பகுதியைச் சேர்ந்த ஷாபி, 36, ஆகியோர் என்பதும், பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை எர்ணாகுளம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரிய
வந்தது.
இதையடுத்து, போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது
செய்தனர்.
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு