பணம், பரிசு பொருள் வழங்கக்கூடாது அனைத்து கட்சியினருக்கு அறிவுறுத்தல்

சேலம்:சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், அனைத்து கட்சி பிர-திநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் இளங்கோவன் பேசியதா-வது:


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அரசு செலவில் விளம்பரம் செய்யக்கூடாது. வேட்பாளராக அல்லாத அமைச்-சர்கள், ஓட்டுச்சாவடி அல்லது ஓட்டு எண்ணும் மையங்களுக்கு செல்லக்கூடாது. பணம், பரிசு பொருட்கள் வழங்கக்கூடாது. ஜாதி, மத உணர்வுகளை துாண்டுவது, கோவில், பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்-யக்கூடாது. 'லவுட் ஸ்பீக்கர்' பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்.


கூட்டம், ஊர்வலம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தை அமலில் உள்ள காலத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுவர். 50,000 ரூபாய்க்கு மேல், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்-படும். இதற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வடக்கு தொகுதி தேர்தல் அலுவலர் கோட்டைகுமார் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Advertisement