தொழிலதிபர் மீது வழக்கு ஜோலார்பேட்டை, மார்ச் 18

பெண் போலீசை மிரட்டிய தொழிலதிபர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே காவலர் குடியிருப்பில் வசிப்பவர் கோகிலா, 33. இவர், சென்னையில் ரயில்வே போலீசாக பணிபுரிகிறார். இவர், சந்தை

கோடியூரை சேர்ந்த தொழிலதிபர் கார்த்தி, 36, என்பவரிடம், சில மாதங்களுக்கு முன், 3 லட்சம் ரூபாயை, வட்டிக்கு வாங்கினார். மாதந்தோறும் வட்டியை செலுத்தி வந்தவரிடம், அசல் தொகையை கேட்டு கார்த்தி, தொடர்ந்து சில நாட்களா தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோகிலா தான் வாங்கிய பணத்திற்கு ஏ.டி.எம்., கார்டு, காசோலை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் அவரிடம் கொடுத்து, கார்த்தியிடம் கால அவகாசம் கேட்டார். அதை ஏற்க மறுத்த கார்த்தி, நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே நின்-றிருந்த கோகிலாவிடம் அசல் தொகையை கேட்டு தகாத வார்த்-தைகளை பேசி, மிரட்டல் விடுத்தார். இது குறித்து கோகிலா புகார் படி, நேற்று ஜோலார்பேட்டை போலீசார்,வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement