லாரி - வேன் நேருக்கு நேர் மோதல் கோவில் அர்ச்சகர் உள்பட 2 பேர் பலி
மேட்டூர்,:லாரி - வேன் நேருக்கு நேர் மோதியதில், கோவில் அர்ச்சகர் உள்பட, 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
சேலம்
மாவட்டம் மேச்சேரி, பாணாபுரம் ஊராட்சி குதிரைக்-காரனுாரை சேர்ந்த,
நெசவு தொழிலாளி பரமசிவம், 44. இவரது மனைவி ராஜேஸ்வரி, 36. இவர்களது
உறவினர் சந்தானம், 47. அருகே உள்ள முத்தாம்பட்டி கோவில் அர்ச்சகர்
செந்தில், 52. அவரது உதவியாளர், சங்ககிரி, சன்னியாசிப்பட்டியை
சேர்ந்த நவீன், 19.
நேற்று முன்தினம், ஆரணி அருகே உள்ள கோவிலில்
கும்பாபி ேஷகம் நடத்த செந்தில், நவீன் ஆகியோரை, பரமசிவம், ராஜேஸ்வரி,
சந்தானம் ஆகியோர், மாருதி 'ஈகோ' வேனில் அழைத்துச்சென்றனர்.
கும்பாபிேஷகம் முடிந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, மேச்சேரி அடுத்த
வெள்ளாறு, கந்தசாமி மலை அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது
முன்புறம் சென்ற வாகனத்தை கடக்க முயன்ற-போது, எதிரே வந்த லாரி மீது
வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் முற்றிலும் சேதமானது. அதில்
பயணித்த செந்தில், நவீன், சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேச்சேரி
போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பரமசிவம், ராஜேஸ்வரி படுகாயம் அடைந்து, கோவையில் உள்ள தனியார்
மருத்துவம-னையிலும், சந்தானம் மேட்டூர் அரசு மருத்துவமனையிலும்
அனுமதிக்கப்பட்டனர். லாரியை ஓட்டி வந்த, மேச்சேரி, கூனான்-டியூரை
சேர்ந்த டிரைவர் பூவரசன், 28, கீரைக்காரனுாரை சேர்ந்த கிட்டு, 50,
ஆகியோர் காயம் அடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ஆந்திராவில் மீன் கொள்முதல் செய்ய
சென்றபோது விபத்தில் சிக்கினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு