குளித்தலை சிறுமியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

குளித்தலை:அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சிறுமியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கண்டித்து பெற்றோ-ருடன் மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கடவூர் ஊராட்சி ஒன்-றியம், வரவணை பஞ்., ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 1 முதல் 3ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் மணப்பாறை பகுதியை சேர்ந்த ஆசிரியர் முருகன், 45, பள்ளிக்கு மது போதையிலும், புகை பிடித்தபடி வருவதாகவும், பள்ளி சிறு-மியரை தொட்டு பேசி, பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடு-பட்டு வருவதாக, பெற்றோரிடம் சிறுமியர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் நேற்று காலை, 8:45 மணியளவில் தலைமையா-சிரியர், ஆசிரியரிடம் இது குறித்து பெற்றோர், பொது மக்கள் விளக்கம் கேட்டனர். சரியாக பதிலளிக்காத தலைமையாசிரியர் மற்ற ஆசிரியர்களை கண்டித்து, பெற்றோர், பொதுமக்கள், மாணவ, மாணவியர் தரகம்பட்டி - கரூர் நெடுஞ்சாலையில், வர-வணை பள்ளி முன் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலை கைவிடக்கோரி, ஆசிரியர்கள் வலியுறுத்-தினர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் உடந்தையாக இருக்கும் மற்ற ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுத்த பின்தான், மறியலை கைவிடுவோம் என்றனர்.


இதையடுத்து சம்பவ இடத்துக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜூ, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகவேலு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திலகவதி, கடவூர் ஏ.இ.ஓ., மீனா, கடவூர் வட்டார மண்டல அலுவலர் ரவிச்சந்திரன், சிந்தாமணிபட்டி எஸ்.ஐ., தங்கசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு-பட்டனர்.


அப்போது, 'பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், பெற்றோர்க-ளிடமும் உரிய விசாரணை நடத்தி, ஆசிரியர் முருகன் மீதும், அவருக்கு உடந்தையாக இருக்கும் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவும், ஆசிரியர் முருகனை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்த-தையடுத்து, போராட்டத்தை மாணவ, மாணவியர், பெற்றோர் கைவிட்டனர்.

பின்னர் விசாரணை நடத்தி, ஆசிரியர் முருகனை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகவேலு உத்தரவிட்டார். தவறுக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரி-யரை இடமாற்றம் செய்தால்தான், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என பெற்றோர்கள் கூறினர். சட்டப்படி நடவ-டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைய-டுத்து தங்கள் குழந்தைகளை, பெற்றோர் அழைத்து சென்றனர்.

Advertisement