வேட்டைக்கு பன்றி வெடி வைத்திருந்த 3 பேர் கைது

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் விஜயன் மற்றும் வனத்துறையினர், பெட்டமுகிலாளம் அடுத்த காளிக்கட்டம் காப்புக்காட்டில் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, அப்

பகுதியில் சுற்றித்திரிந்த, 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், பெட்டமுகிலாளம் அருகே கள்ளியூரை சேர்ந்த மூர்த்தி, 29, சக்தி, 29, சவுந்தர்ராஜன், 40, என்பதும், விலங்கு வேட்டையாட பன்றி வெடிகளை வனப்பகுதிக்குள் வைக்க வந்ததும் தெரிந்தது. மூவ-ரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்த, 20 பன்றி வெடிகள், 3 டார்ச்லைட் மற்றும் கத்தி ஆகியவற்றை பறி-முதல் செய்தனர்.

Advertisement