வெள்ளி கிலோ ரூ.4,000 உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14 ,710 ரூபாய்க்கும், சவரன் , 1,17,680 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 276 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 14,650 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 1,17,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அதேசமயம், வெள்ளி கிராமுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் அதிகரித்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement