அசாமில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருப்பம்: காங்கிரஸ் எம்பி ராஜினாமா

3


குவஹாத்தி: அசாமின் முக்கிய காங்கிரஸ் எம்பி பிரத்யுத் பர்தோலோய், தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பாஜவில் இணைய உள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன. அசாமில் மூத்த தலைவரும், காங்கிரஸ் எம்பியான ரத்யுத் பர்தோலோய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அனுப்பி உள்ளார். கடிதத்தில் பிரத்யுத் பர்தோலோய் கூறியிருப்பதாவது:

இன்று மிகுந்த மனவேதனையுடன், காங்கிரஸில் நான் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் எம்பி பதவியில் இருந்து விலகுவதாக இதன் மூலம் அறிவிக்கிறேன்," என கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் வகையில் காங்கிரஸ் எம்பி ராஜினாமா செய்தது அக்கட்சி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நிருபர்கள் சந்திப்பில் பிரத்யுத் பர்தோலோய் கூறியதாவது:



இன்று, என் வாழ்வின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றை நான் கைவிட்டுள்ளேன்; இதனால் எனக்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை. எனினும், நான் இந்தக் முடிவை எடுத்ததற்குக் காரணம், காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே, குறிப்பாக அசாம் காங்கிரஸ் கட்சிக்குள என்னை அணுகிய எவராலும், பல விவகாரங்களில் நான் அவமதிக்கப்பட்டு வந்ததே ஆகும். காங்கிரஸ் தலைமையும் கூட என் மீது எவ்வித அனுதாபத்தையும் காட்டவில்லை.


என் வாழ்நாள் முழுவதும் நான் காங்கிரஸ் கட்சியுடனே இணைந்து பயணித்திருந்ததால், தற்போது நான் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அண்மைக் காலமாக, கட்சியில் தொடர்ந்து நீடிப்பது எனக்கு மிகவும் கடினமாகிவிட்டது; எனவே தான் நான் இந்தக் முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. எனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவரிடம் நான் சமர்ப்பித்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement