தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின் ஒரே நாளில் சாலை அமைத்ததால் சர்ச்சை

வாழப்பாடி:வாழப்பாடி அருகே பேளூர் டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு, ஜமால் தெருவில் சில மாதங்களுக்கு முன், 'பேவர் பிளாக்' சாலை போடப்பட்டது. பின் தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின், , அவசர அவசரமாக அதே வீதியில் மீதி பகுதியில், சிமென்ட் சாலை அமைக்க கட்டுமா-னப்பொருட்களை இறக்கினர்.


தொடர்ந்து முறையாக சமன்படுத்தாமல், 67 மீ.,க்கு சாலை அமைக்கும் பணி தொடங்கி, அன்று இரவே முடிந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின், ஒரே நாளில் சாலை அமைத்-ததால், சர்ச்சை ஏற்பட்டது.

டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மாதவன்(பொ) கூறு-கையில், ''ஏற்கனவே பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. பின் அதே வீதியில் இறக்கமாக உள்ள பகுதியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க, இரு மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கப் பட்டது. தற்போது அங்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. விதிமீறல் இல்லை. இருப்பினும் அடிப்-படை நடைமுறை பின்பற்றப்பட்டதா என விசாரிக்கப்படும்,'' என்றார்.

Advertisement