'நகை அடகு வைத்து பணம் பெறுவோர் விபரம் இல்லாவிட்டால் உரிமம் ரத்து'
ஓமலுார்:நகை
அடகு கடை, மண்டப உரிமையாளர், வங்கி, பிரின்டிங் பிரஸ், லாட்ஜ்
உரிமையாளர்களுக்கு, தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை
கூட்டம், ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. அதில் ஓமலுார்
தொகுதி தேர்தல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:
நகை
கடைகளில் அதிக நகைகளை வைத்து(பல்க்) பணம் பெறுவோர் விபரம் கண்டிப்பாக,
ஆவணங்களில் இருக்க வேண்டும். தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால்
கடை உரிமம் ரத்து செய்யப்படும். பிரின்டிங் செய்யப்படும் தேர்தல்
தொடர்பான வேலைகளுக்கு எந்த கடையில் அச்சிடப்பட்டது என்ற விபரம்
நோட்டீஸில் கீழ் இடம்பெற வேண்டும். மண்ட-பத்தில் வாக்காளர்களுக்கு,
அரசியில் கட்சியினர், பரிசு பொருட்கள் வழங்க இடம்
கொடுக்கக்கூடாது. வங்கிகளில் நடக்கும் பணப்பரிமாற்றம்
கண்காணிக்கப்படும். அனைவரும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மண்டல துணை தாசில்தார் பாலமுருகன்,
தேர்தல் துணை தாசில்தார் சீனிவாசன் உடனிருந்தனர். ஓமலுார்,
காடையாம்பட்டி, தாரமங்கலம் பகுதிகளில் இருந்து,
50க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
-
கோவில் உண்டியலில் கொள்ளை
-
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல் கோவில் அர்ச்சகர் உள்பட 2 பேர் பலி
-
குளித்தலை சிறுமியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
தொழிலதிபர் மீது வழக்கு ஜோலார்பேட்டை, மார்ச் 18
-
வேட்டைக்கு பன்றி வெடி வைத்திருந்த 3 பேர் கைது