மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் ரூ.7.41 லட்சம் ரொக்கம் பறிமுதல்
கரூர்:கரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில், ௭ லட்சத்து, ௪௧ ஆயி-ரத்து, 790 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில், வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் தலைமை
யில்,
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை,
4:30 மணிக்கு மோகனுாரில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரியை சோதனை
செய்த போது, நாமக்கல் மாவட்டம் வடக்காலப்புதுாரை சேர்ந்த
சுப்பிரமணி என்பவ-ரிடம், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதததால், 3
லட்சத்து, 79 ஆயிரத்து, 790- ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின்,
கரூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அரவக்குறிச்சி அருகே, ஆண்டிப்பட்டி கோட்டை டோல்கேட்டில், நிலையான கண்
காணிப்பு
குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.நேற்று காலை, 7:42 மணிக்கு மதுரையில்
இருந்து சேலம் நோக்கி காரில் பயணம் செய்த, மதுரை பங்கஜம் காலனியை
சேர்ந்த, சாந்தாராம் என்ப-வரிடம், 54 ஆயிரம் ரூபாய் இருப்பது
கண்டறியப்பட்டது. இந்த தொகைக்குரிய சரியான ஆவணம் இல்லாததால்,
தொகை பறி-முதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலத்தில்
ஒப்படைக்கப்பட்-டது.
கரூர் அருகே புலியூரில், நிலையான
கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அதில்,
கிருஷ்ணராயபுரம் அருகே பொய்கைபுத்துார் குடித்தெருவில் மகாதேவன்
என்பவர் நேற்று மதியம், 3:30 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில், 1
லட்சம் ரூபாய் எடுத்து சென்றார். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து
செல்லப்பட்டதால், அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல்
நடத்தை விதிமுறை அமல்படுத்திய பின், இரண்டு நாட்களில் கரூர்
தொகுதியில், 3 லட்சத்து, 79 ஆயிரத்து, 790- ரூபாய்,
அரவக்குறிச்சியில், 54 ஆயிரம் ரூபாய், கிருஷ்ணராயபுரத்தில்,
ஒரு லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய், குளித்தலையில், 1 லட்சம் ரூபாய் என
மொத்தம், 6 லட்சத்து, 87 ஆயிரத்து, 790 ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.
* அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புகழூர்
வட்டம், மோலப்-பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், நேற்று
மாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மகேந்-திரா பிக்கப் வாகனத்தில்
திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி, 37, என்பவர் ஆவணமின்றி கொண்டு
சென்ற, 54 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல்
செய்யப்பட்ட பணம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!