மனைவி மாயம்; கணவர் புகார் போலீசார் விசாரணை
குளித்தலை:குளித்தலை அடுத்த கழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் சித்திக், 40. இவர் மொபைல் ஷாப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது
மனைவி ரஜப்நிஷா, 31. இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது.
ரஜப்நிஷாவுக்கு கடந்த, 16 மதியம் 2:30 மணியளவில் உடல்நிலை
சரியில்லாததால், தோகைம-லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று
வருவதாக, அவரது கணவருக்கு போன் மூலம் தெரிவித்தார். பின்னர்
சிகிச்சை முடிந்து மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்கு செல்வதாக கூறினார்.
இந்நிலையில்,
ஷேக் சித்திக் தன் மனைவி மொபைலுக்கு போன் செய்தார். அப்போது, தோகைமலை
கருப்பு கோவில் அருகேயுள்ள டீக்கடைக்காரர் போனை எடுத்து, கீழே
கிடந்ததாக அவரிடம் பேசினார். பின்னர் பல இடங்களில் தேடியும்
கிடைக்-காததால், மனைவியை காணவில்லை என, ஷேக் சித்திக் கொடுத்த
புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!