பழைய பஸ் ஸ்டாண்டில் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலம்
கரூர்:கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில், வெயிலில் திறந்த வெளியில் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்,
தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பழைய பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில்
செயல்பட்டு வருகிறது. ஏற்க-னவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள்,
குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல
குறைபாடுகள், பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது. மேலும் போதிய குடிநீர்
வசதி இல்லை. இதுதவிர மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் நிற்பதற்கு நிழற்கூட வசதியில்லை.
இந்நிலையில்,
கரூரில் கடந்த சில நாட்களாக கோடைக்கால வெயிலின் தாக்கம்
அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ,
மாணவியர் நிற்க இடமின்றி, திறந்த வெளியில் வெயிலில் பஸ்சுக்காக
காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில்
பயணிகள் வச-திக்காக, தென்னங்கீற்று பந்தல் அல்லது ெஷட் அமைக்க கரூர்
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
நாளை சென்னை வருகிறார் பியூஷ் கோயல்; அதிமுகவுடன் இறுதியாகிறது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
-
சாதனைகள், கொள்கைகள் இல்லை... ஆபாசங்கள், அவதூறுகள் உண்டு; அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
-
மேற்காசியாவில் தற்போதைய நிலவரம்: குவைத் இளவரசருடன் போனில் பிரதமர் மோடி பேச்சு
-
காங்.குடன் தொகுதி பங்கீடு முடியும் முன்பே திமுகவினர் வேட்பு மனு தாக்கல்; இது புதுச்சேரி கலாட்டா
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு
-
ராஜேந்திரா ரோட்டில் நெரிசல் நிரந்தரம்