மேற்காசியாவில் தற்போதைய நிலவரம்: குவைத் இளவரசருடன் போனில் பிரதமர் மோடி பேச்சு
புதுடில்லி: குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் பாதுகாப்புச் சூழல் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா உடன் தொலைபேசியில் உரையாடி, வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.
குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதை மீண்டும் வலியுறுத்தினோம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ச்சியான ராஜதந்திர ஈடுபாடு இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான அவரது தொடர்ச்சியான ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்தேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மோடி யார்? எப்படிப்பட்டவர்?
உலக தலைவர்களுக்கு தெரிந்ததை உள்ளூர் தலைவர்களுக்கு தெரியவில்லையே?
ஈரான் தலைவரிடம் கேட்டால் பிரதமர் மோடி எங்கள் நாட்டு நண்பர் என பெருமையோடு கூறுகிறார்.
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை கேட்டாலும் பிரதமர் மோடி தான் எங்கள் நாட்டின் உற்ற நண்பர் என கூறுகிறார்.
ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்காவின் டிரம்ப் இருவருக்குமே அவர்களுக்குள் நல்ல நட்பு இல்லாவிட்டாலும் மோடி இவர்கள் இருவருக்குமே மோடி தான் நெருங்கிய நண்பர்
ஆக மோடி என்ற பெயரை கேட்டதும் உலக தலைவர்கள் எவருக்குமே மோடியின் நட்பு பாராட்டும் உயரிய குணமே அவர்கள் முன் பெரிதாக நிற்கிறது.
அதனால் தான் இந்த அணைத்து நாடுகள் உள்பட பல உலக நாடுகளுக்கு நமது மோடி மட்டுமே சிறந்த நண்பர்
இந்த ஆழமான அழுத்தமான உலக நாடுகளின் நட்பு உறவு மோடி பிரதமராக வந்த பின் தான் இந்தியாவிற்கு உலக அளவில் கிடைத்தது இதை தக்கவும் வைத்துள்ளார்
இதைதான் வெளியுறவு கொள்கை என இந்தியா நம்புகிறது. இதன் பிடிமானம் உறுதியாக இருப்பதால் தான் எந்த நாடுகளும் தங்களுக்குள் யுத்தம் நடத்தி கொண்டாலும் அங்குள்ள இந்தியர்களுக்கும் எந்த இழப்பும் ஏற்பட அந்த நாடுகள் அனுமதிப்பதில்லை நம்து உள் நாட்டின் தேவையை கூட தாராளமாக வழங்கிடவும் அவை நம் நாட்டு மக்களுக்கு வந்து சேரும் பெரிய பொருப்பையும் கூட அந்த நாடுகளே மேற் கொள்கின்றன.
மோடி பகைமையை விட நட்பிற்கே முக்கியத்துவத்தும் தந்ததற்கு உலக நாடுகள் திருப்பி தரும் பிரதிபலனை மரியாதையை நம் கண் முன்னால் நாமே காண்கிறோம்
இதை ஜீரணிக்க முடியாத- வேறு வழியும் தெரியாத
ராகுல் -கார்கே-சிதம்பரம் போன்றவர்கள் உள்ளூர் பத்திரிக்கைகளுக்கு குப்பை தனமான தங்களது கருத்துக்களை அறிக்கை வழியாக அடிக்கடி கொடுத்து நிம்மதியை தேடுகிறார்கள்.
மோடியின் ராஜ தந்திரம் வாழ்க வளர்க நம் நாட்டின் நலம் கருதி அந்நிய நாட்டுடன் நட்பு மேலோங்குக