2 நாள் வாகன சோதனையில் ரூ.20.35 லட்சம் பறிமுதல்

கோபி சட்டசபை தொகுதி, தேர்தல் பறக்கும்படை அதிகாரி முருகேசன் தலைமையில், மொட்டணம் செக்போஸ்ட் பகு-தியில், நேற்று காலை, 11:00 வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர்.

அப்போது வந்த டிரைபர் காரில் சோதனை செய்தபோது, காரில் வந்த சேவூரை சேர்ந்த ராஜ்குமார், மோட்டார் பழுதுக்காக உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக, 50 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


* பாரியூர் அருகே பறக்கும் படை அதிகாரி அருண் தலைமையில் நேற்று காலை, 6:15 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டி-ருந்தனர். அப்போது கோபியை சேர்ந்த லோகநாதன், மினி டெம்-போவில் வந்தார். வியாபாரம் செய்த தொகையாக, உரிய ஆவ-ணமின்றி வைத்திருந்த, 52 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


* கோபி அருகே பள்ளிக்கூடம் பிரிவில், பறக்கும் படை அதி-காரி மீனாட்சி சுந்தரம் தலைமையில், நேற்று காலை, 7:15 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஈச்சர் வேனில் வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி சசிக்-குமாரிடம், உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 98 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


* கோபி அருகே சிங்கிரிபாளையம் பகுதியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று காலை 9:15 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பைக்கில் வந்த கோபியை சேர்ந்த சுரேஷிடம், உரிய ஆவணமின்றி வியாபாரத்துக்கு வைத்-திருந்த, 75 ஆயிரத்து, 150 ரூபாயை பறிமுதல் செய்தனர். மொத்தம் நான்கு இடங்களில் சிக்கிய, 2.76 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படை குழுவினர், கோபி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவியரசிடம் ஒப்படைத்தனர்.


* பவானிசாகர் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர், புளியம்பட்டி அடுத்த புதுரோடு பஸ் நிறுத்தம் அருகே, நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வகுத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த பிரகாஷிடம், 1.24 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜமுனாராணி அறி-வுறுத்தலின்படி, சத்தியமங்கலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்-டது.


* பவானிசாகர் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை-யினர், நேற்று காலை பல்வேறு இடங்களில் வாகன சோத-னையில் ஈடுபட்டனர். அரசூரில் செல்வராஜ் என்பவரிடம், 54,750 ரூபாய்; அத்தாணி சாலையில் மயில்சாமி என்பவரிடம், 59,800 ரூபாய்; பண்ணாரி சோதனை சாவடியில் பிரபு என்பவ-ரிடம், 54,100 ரூபாய்; ஆசனுார்-கொள்ளேகால் பகுதியில் குமார், என்பவரிடம், 1.49 லட்சம் ரூபாய் என, 3.73 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


* சத்தியமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படையினர், பண்ணாரி சாலையில் வாகன தணிக்கையில் நேற்று மதியம் ஈடுபட்டிருந்-தனர். அப்போது வந்த கர்நாடக மாநில அரசு பஸ்சில் சோதனை செய்த போது சின்னன்னண் என்பவரிடம், 1.45 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


* அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள், அத்தாணி கைகாட்டியில் நேற்று முன்தினம் நள்ளி-ரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேனில் வந்த கோவை, தெலுங்குபாளையம் நாகராஜ், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்துக்கு மாடு வாங்க செல்வது தெரிந்தது. அவரிடம், 1.12 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்-லாததால் பறிமுதல் செய்தனர்.


* அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆப்பக்கூடலில், பறக்கும்படை அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு டெம்போ வேனில் கவுந்தப்பாடியை சேர்ந்த தமிழ்செல்வன் வந்தார். கர்நாடகா மாநிலத்துக்கு தக்காளி கொள்முதல் செய்ய, 60 ஆயிரம் ரூபாய் எடுத்து சென்றார். உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.

* கோபி அருகே கொளப்பலுாரில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ஹரிபிரசாத் தலைமையில், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் குன்னத்துாரை சேர்ந்த மாட்டு வியாபாரி நடேஷ்கு-மாரிடம், 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


* கோபி அருகே காசிபாளையத்தில் தேர்தல் பறக்கும்படை குழு அதிகாரி சோமசுந்தரம் தலைமையில் நேற்று மதியம் சோத-னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த சத்தியை சேர்ந்த காஸ் பங்க் உரிமையாளர் நடராஜன், வங்கியில் டெபாசிட் செய்ய, 4.42 லட்சம் ரூபாய் கொண்டு வந்தார்.உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவியரசிடம் ஒப்படைத்தனர்.

* அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் ஆப்பக்கூடல் ரோட்டில், பறக்கும் படை அலுவலர் பழனிச்சாமி தலைமையில், நேற்று அதிகாலை வாகன சோதனை நடந்தது. இதில் கவுந்தப்பாடி திரு.வி.க., நகரை சேர்ந்த தமிழ்செல்வனிடம், 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


ரூ.19.10 லட்சம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில், தேர்தல் பறக்கும் படையினரால், பல்வேறு பகுதிகளில், 20 லட்சத்து, 35,120 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணம் வழங்கியதன் அடிப்படையில், 19 லட்சத்து, 10,290 ரூபாய் உரிய-வர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement