சேவல் சூதாடிய 4 பேர் கைது

பவானி:ஆப்பக்கூடலை அடுத்த மாக்கல்புதுாரில், சேவல் சூதாட்டம் நடப்பதாக, ஈரோடு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்-தது.

போலீசார் சென்றபோது பலர் தப்பி விட்டனர். நான்கு பேர் மட்டுமே சிக்கினர், விசாரணையில் மாக்கல்புதுாரை சேர்ந்த ஸ்ரீதர், 36, முருகன், 55; ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் தங்கவேல், 63; ஈரோடு நாச்சியப்பா வீதி செந்தில்நாதன், 49, என தெரிந்தது. 11 சேவல், 53,540 ரூபாய், நான்கு செல்போன், இரண்டு பைக், ஒரு காரை பறிமுதல் செய்-தனர். நான்கு பேரையும் கைது செய்து, ஆப்பக்கூடல் போலீசா-ரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement