100 சதவீதம் வாக்களிப்பு அவசியம் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி
சட்டசபை தொகுதி, கடத்துார் பஸ் ஸ்டாண்டில், தமிழகத்தில் நடக்கவுள்ள
சட்டசபை பொதுத்தேர்-தலில், 100 சதவீதம் வாக்களிப்பின் அவசியம்
குறித்து விழிப்பு-ணர்வு இயக்கம் நடந்தது. இதில், 'ஏப்., 23ல் தவறாமல்
ஓட்டுப் போடுவேன், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்றும் உறுதிய-ளித்து
கையெழுத்து இடுகிறேன்' என எழுதப்பட்டு இருந்தது.
இதில்,
பொதுமக்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரிடமும்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதை, மாவட்ட கலெக்டர் சதீஷ் துவக்கி வைத்தார். தேர்தல் நடத்தும்அலுவலர் கோவிந்தன், தாசில்தார்
பார்வதி, தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
*
சட்டசபை தேர்தலில், அரூர் தொகுதியில், 100 சதவீதம் ஓட்-டுப்பதிவு
குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
அரூர் பஸ் ஸ்டாண்டில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, தேர்தல்
நடத்தும் அலுவலரும், அரூர் ஆர்.டி.ஓ.,வுமான செம்மலை துவக்கி வைத்தார்.
இதில், பொது-மக்கள், வியாபாரிகள், பயணிகள் என அனைத்து தரப்பினரும்
கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், அரூர் நகராட்சி கமிஷனர் விஜயஸ்ரீ,
தாசில்தார் வள்ளி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்-ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!