காரிமங்கலத்தில் அபாயகரமான முறையில் சாலையை கடக்கும் கல்லுாரி மாணவியர்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்திலுள்ள, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 2013ல் தொடங்கப்பட்டது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். கல்லுாரி வளாகம், சேலம் -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதி-களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் கல்லுா-ரிக்கு மாணவியர் வந்து செல்கின்றனர். பலர் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.


காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவியர் தேசிய நெடுஞ்-சாலையை அபாயகரமான முறையில் கடந்து செல்வதை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையின் குறுக்கே உயர்-மட்ட நடைபாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நடை மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்னரும், மாணவியர் பாலத்தை பயன்படுத்தாமல், மீண்டும் அபாயகர-மான முறையில் சாலையை கடந்து சென்று வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் அதிவேக வாகனங்களால், மாண-வியர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவியர் நடை மேம்பாலத்தை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement