அரூர் சப்-டிவிஷனில் 132 துப்பாக்கி ஒப்படைப்பு
அரூர்:தமிழகத்தில்
ஏப்., 23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்-படுமென கடந்த, 15ல்
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தை
விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து, உரிமம் பெற்ற
துப்பாக்கி-களை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க,
காவல்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம்,
அரூர் சப்-டிவிஷனுக்கு உட்-பட்ட, கம்பைநல்லுார், மொரப்பூர், அரூர்,
கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, அ.பள்ளிப்பட்டி,
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் ஆகிய, 9 போலீஸ்
ஸ்டேஷன்களில், உரிமம் பெற்ற, 132 துப்பாக்கிகள்
ஒப்படைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஒப்படைக்காத
நபர்களிடமிருந்து அவற்றை பெற நட-வடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட
காரணங்களுக்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு
வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.