பைக் மோதி பிளம்பர் பலி
திருப்போரூர்:கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர், இரட்டை மலை சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 58, பிளம்பர். இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, ஓ.எம்.ஆர்., சாலையில், சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சைக்கிளில் வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது கழிப்பட்டூர் அருகே எதிரே வந்த பைக், முருகன் மீது மோதி கீழே விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால் தகவல் தெரிவிக்க வங்கிகளுக்கு உத்தரவு
-
நள்ளிரவில் தி.மு.க., அவசர ஆலோசனை
-
சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் உரிமம் பெற்ற துப்பாக்கி ஒப்படைப்பு
-
ராசிபுரத்தில் கொட்டி தீர்த்த கோடை மழையால் மகிழ்ச்சி
-
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று உண்டு! 2 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களுக்கு நெருக்கடி
-
இந்திய மின் உற்பத்தி துறையில் முதலீடு; உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Advertisement
Advertisement