ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளை, தேர்தல் பார்வையாளர் (பொது) சுனில் குமார் யாதவ் ஆய்வு செய்தார்.

மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், 360 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. நேற்று மாலை தேர்தல் பார்வையாளர் (பொது) சுனில் குமார் யாதவ், சட்டசபை தொகுதியில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளியிலும், மேட்டுப்பாளையம் ஜி.எம்.ஆர்.சி., பள்ளியிலும் உள்ள ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் அமுதாவிடமும், அலுவலக பணியாளர்களிடம் விபரங்கள் கேட்டறிந்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் உடனிருந்தார்.

Advertisement